ஸ்ரீவைகுண்டம் நவ.நவ 7 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாவதான நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் நேற்று பாலாலயம் நடந்தது. 2013 ல் கும்பாபிஷேகத்திற்குப் பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த கும்பாபிஷேகத்திற்கு முன்னோடியாக பாலாலயம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று துவங்கி இரண்டு கால ஹோமங்கள் பூர்ணாகுதி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7 மணிக்கு திருமஞ்சனம்.தீபாராதனை. 8 மணிக்கு ஹோமம் செய்து 9 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.அத்யாபகர்கள். சீனிவாசன். பட்சிராஜன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவித்தனர். 9.20 மணிக்கு கும்பங்கள் சர்வசாதகம் கோவிந்தன் பட்டர்.
தலஅர்ச்சகர்கள் கண்ணன் பட்டர் . கோபாலகிருஷ்ணன் பட்டர் வெங்கடாச்சலம்பட்டர் உட்பட பட்டர்கள் புறப்பட்டு ராஜ கோபுரம். விமானம். நரசிம்மர். சன்னதி கருடன். துவாரபாலகர்கள்.மடப்பள்ளி தாயார். கிருஷ்ணர்.ஆழ்வார்கள். ஆச்சாரியார்கள் செய்து வைக்கப்பட்ட அத்திமர பிம்பங்கள் உள்ள தனி இடத்தில் சென்று தீர்த்தங்கள் ஆவாகனம் செய்தனர்.
பின்னர் ராஜகோபுரம். விமானம் அருகில் திருப்பணி செய்ய கால்நாட்டப்பட்டது. பக்தர்களுக்கு கும்ப தீர்த்தம் தெளிக்கப்பட்டது. சாத்துமுறை நடந்து தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நிஷாந்தினி. கணக்கர் இசக்கிப் பாண்டி.
அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை வேணு கோபாலஸ்வாமி கைங்கர்யம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக