திமுக பாக முகவர்கள் (BLA-2) மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

திமுக பாக முகவர்கள் (BLA-2) மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

திமுக பாக முகவர்கள் (BLA-2) மற்றும் தேர்தல் பணிக்குழு  ஒருங்கிணைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
திருப்பத்தூர் , நவ 8 -

திருப்பத்தூர் மாவட்டம் திமுக பாக முகவர்கள் (BLA-2) மற்றும் தேர்தல் பணிக்குழு  ஒருங்கிணைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) குறித்து திருப்பத் தூர் YDK மஹாலில்   நடைபெற்றது 
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகு திகளில் கழகம் சார்பில் வாக்குச்சாவடி களில் நியமிக்கப்பட்டுள்ள பாக முகவர் கள் (BLA-2) மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலா ளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப் பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் தலைமையில் பொதுப்பணி துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், 
வடக்கு மண்டல பொறுப்பாளர், 
மாவட்ட பொறுப்பு அமைச்சர்  எ.வ.வேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் திருவண் ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, 
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகி கள், சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், தகவல் தொழில் தொழில்நுட்ப அணி தொகுதி OTN ஒருங்கிணைப்பாளர்கள்,  வாக்குச் சாவடி பாக முகவர்கள் (BLA-2) கலந்து கொண்டார்கள். இறுதியாக நன்றியுரை ஆற்றிய மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வடிவேல். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன். மற்றும் திமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad