குப்பை மேலாண்மையை கடைப்பிடிக்காத திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

குப்பை மேலாண்மையை கடைப்பிடிக்காத திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிக்கை


திருப்பூர் இடுவாய் ஊராட்சி , சின்னகாளி பாளையத்தில்  திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டுவதை எதிர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுடன் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்  இந்த போராட்டத்தில்  நாம்தமிழர்கட்சியின் பல்லடம் சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் க. வே.தமிழினியன், மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி பி.அபிநயா அவர்களும் கலந்து கொண்டனர்  பொதுமக்களுடன் நாம்தமிழர் நிர்வாகிகள்  கலந்துகொண்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டமானது பன்மடங்கு தீவிரமடைந்து வருகிறது இந்த போராட்டம் பற்றி திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் பல்லடம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.வே. தமிழினியன் மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி பி. அபிநயா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் 

 திருப்பூர் மாவட்டம் என்பது அந்த மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழும் பகுதி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் மக்கள் திருப்பூருக்கு வந்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எப்போதும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் திடீரென்று இந்த இரண்டு ஆண்டிற்குள் குப்பை பிரச்சினை தலைவிரித்து ஆடுவது மாநகராட்சி நிர்வாகம் திரனற்றது என்பதையும், அதன் மெத்தனப்  போக்கையும்,‌ மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையற்ற தன்மையையும் வெளிக்காட்டுகிறது. 

திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே 16 மைக்கரோ- கம்போஸ்ட் மையங்கள் உள்ளதாக தகவல் இருக்கிறது, ஆனால், எந்த மையமும் முறையாக செயல்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

மக்களின் வரிப்பணத்தை கொண்டு உருவாக்கப்படும் இந்த திட்டங்கள் ஏன் சரியாக மக்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை?

திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்தாமல்,  குப்பையை தரம் பிரிக்காமல் ஒரு பகுதியில் கொண்டி மொத்தமாக கொட்டுவது என்பது  என்றுமே தீர்வு தராது.‌

இந்த செயலால் இயற்கை வளங்களும், சுற்றுச்சூழலும் மாசு படுவது மட்டுமல்லாமல் ஈ, கொசு போன்றவையாள்  மக்கள் கடுமையான தொற்று நோய்களுக்கு உள்ளாவது கடும் வேதனையை அளிக்கிறது.

இதை சொன்னபோது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவம் பார்த்துக்கொள்வோம் என்று சொல்லும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இந்த செயலால் மாசுபடும் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் எந்த மருத்துவரை வைத்து மருத்துவம் பார்க்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

 மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்துவது மட்டும் தான் ஒரே தீர்வாகும்.‌

இது ஒரு பகுதி வாழ் மக்களின் பிரச்சனை இல்லை ஒட்டு மொத்த திருப்பூரின் பிரச்சினை. 

நாம் வாழும் மண்ணை காக்க, நம் எதிர்கால தலைமுறை நல்வாழ்வு வாழ, திருப்பூர் மக்கள் திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த முன் வர வேண்டும். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இனிமேலாவது போர்க்கால அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.‌

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad