அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்



அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி என்கின்ற ஜி சுப்பிரமணியம் அவர்கள் ஏற்பாட்டில் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க அனுமதியுடன் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறது வருகின்ற 9-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை திருப்பூர் 15-வேலம்பாளையம் சோளிபாளையம் ரோடு சங்கரன் தோட்டம் வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது இந்த முகாமில் கண்புரை நீர் அழுத்தம்‌ மாலைக்கண் கிட்ட பார்வை தூரப்பார்வை குழந்தைகளுக்கான கண் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும் தேர்வு செய்யப்படும் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மருந்து தங்கும் வசதி உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முகாம் தொடர்புக்கு ஏ ஆர் குருநாதன் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் தொடர்பு எண் 96 55 46 81 93 மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு தாங்கள் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின்  நிறுவனத் தலைவர் ஜி.கே. விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad