அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நெமிலி ஒன்றிய சேர்மேனுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நெமிலி ஒன்றிய சேர்மேனுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நெமிலி ஒன்றிய சேர்மேனுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
ராணிப்பேட்டை ,நவ 4 -

இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று முன்தினம், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, இராணிப்பேட்டை சமத்துவபுரம் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் 72 ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு 296 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அப் போது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய, அயராது பாடுபட்ட நெமிலி ஒன்றிய குழு தலைவரும், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளருமான வடிவேலு மற்றும் அவருடன் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள், மேடையில் பேசும்போது நன்றி யையும், பாராட்டுக்களையும் தெரிவித் தார்.மேலும், நெமிலி ஒன்றிய சேர்மேன் வடிவேலு அவர்களை,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் அறிமுகப்படுத்தி, அவரை பாராட்டி துணை முதலமைச்சர் அவர்கள் கரங்களால்  பட்டு வேட்டி அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.இந்த நிகழ்வில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பி னர் ஈஸ்வரப்பன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை அலு வலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்  விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு 9843264123

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad