தமிழகத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி சர்க்கரை பாமாயில் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பொருட்களை ரேஷன் கடைகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வாங்குவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர் ஏனென்றால் நீண்ட நேரம் காத்திருப்பதால் பெரிதும் அவதியுற்று முதியவர்கள் நிழலை தேடி அமர்ந்து சோர்வுற்று வாங்க வேண்டிய நிலைமை இருந்தது மேலும் வயதானவர்கள் கடைக்கு வர முடியாமல் பொருட்களை வாங்குவதை தவிர்த்து வந்தனர் இதையெல்லாம் மனதில் கொண்டு தமிழக அரசு தாயுமானவர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது அந்த வகையில் திருப்பூர் பகுதிகளில் தாயுமானவர் திட்டத்தில் வாகனத்தில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்கள் படத்தில் உள்ளது அனுப்பர்பாளையம் தண்ணீர் பந்தல் காலனி ரேஷன் கடைகள் சார்ந்த வாகனத்தில் அனுப்பர்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது இதையொட்டி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக