எஸ் ஐ ஆர் குறித்து மாவட்ட செயலாளர் அவர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை!
திருப்பத்தூர் , நவ 10 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (S.I.R) எனும் சூழ்ச்சியை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் அவர்கள் தலை மையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலா ளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக உடன்பிறப்புகள் மிகுந்த விழிப்புணர்வு டன் பணியாற்றிடவும், SIR-க்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வும் பல்வேறு ஆலோசனைகளை
தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் அவர்கள் வழங்கினார். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வா கிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது!
மக்களைச் சந்தித்து நம்மை வெல்ல முடியாதவர்கள், S.I.R அநீதியை கையில் எடுத்திருப்பதை, மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துவோம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்!
வாக்குரிமையையும் - ஜனநாயகத்தையும் காப்போம்!
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக