பாலாற்றை கடக்க முயன்ற பெண் கூலி தொழிலாளி ஆற்று நீரில் முழுகி மாயம் தேடுதல் பணி தீவிரம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

பாலாற்றை கடக்க முயன்ற பெண் கூலி தொழிலாளி ஆற்று நீரில் முழுகி மாயம் தேடுதல் பணி தீவிரம் !

 பாலாற்றை கடக்க முயன்ற பெண் கூலி தொழிலாளி ஆற்று நீரில் முழுகி மாயம் தேடுதல் பணி தீவிரம் !
வாணியம்பாடி, நவ்.10-

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் கல்லறை பகுதி யைச் சேர்ந்தவர் இயேசுஇவரது மனைவி நிர்மலா (வயது 40), இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை என நான்கு குழந்தைகள் உள்ளன. நிர்மலா வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளி யாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக உதயேந்திரம் பாலாற்றை கடக்கும் போது அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள் ளார்.
இந்த சம்பவம் குறித்து அப் பகுதியில் இருந்தவர்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் கிராமிய போலீசார் மற்றும் தீணிப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார்
மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீரில் மாயமான நிர்மலாவை தேடினர். இரவு நேரமானதால் போதிய வெளிச்சம் இல்லாத காரணமாக நேற்று தேடும் பணி தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாயமாக நிர்மலா வை தீயணைப்புத் துறையின் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad