சாலைகள் அழகுப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் கலெக்டர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , நவ 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் சாலைகள் அழகுப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் கலெக்டர் பங்கேற்பு! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (10.11.2025) ராணிப்பேட்டை நகராட்சி. கேஎச் எக்ஸ் போர்ட் நிறுவனம் எதிரில் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை ரவுண்டானா மற்றும் வீசி மோட்டூர் அண்ணா சிலை எதிரில் உள்ள இடத்தில் போக்குவரத்து திடல் (traffic Island) அமைக்கும் பணிக்கும். காரை மேம்பாலத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிக்கும் என மொத்தம் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அழகுப்படுத்தும் பணிக்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனை வர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.. நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா. நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செல்வ குமார். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் திரிபுரசுந்தரி, நகரமன்ற உறுப்பினர்கள் ஏர்டெல்குமார். எஸ். வினோத் நகர செயலாளர் பி.பூங்கா வனம் மற்றும் கழகத்தினர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக