தூத்துக்குடியில் வழிமறித்தல் சம்பவத்தில் இளைஞர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

தூத்துக்குடியில் வழிமறித்தல் சம்பவத்தில் இளைஞர் கைது.

தூத்துக்குடியில் வழிமறித்தல் சம்பவத்தில் இளைஞர் கைது 

தூத்துக்குடி முள்ளக்காடு ராஜுவ் நகர் 2வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்து செல்வம் வயது(25) இவர்(09/11/2025) அன்று குடும்பத்துடன் ஏரல் அருகே அமைந்துள்ள சேர்மன் கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது 
இரவு 9:40 மணி அளவில் முள்ளக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த மரியதாஸ் மகன் ஜேசு பாலன் இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் முள்ளக்காடு சாலையில் வைத்து முத்து செல்வம் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபொழுது ஜேசுபாலன் என்பவர் முத்துச்செல்வம் பைக்கை மறித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு சென்று ஓடினர். இதைகுறித்து இந்த செல்லின் மதிப்பு சுமார் ₹5000 மாக தெரிய வந்தது. 

இதுகுறித்து( 10 .11 .2025) அன்று முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி, உதவி ஆய்வாளர் முகிலரசன் ,துணை உதவி ஆய்வாளர் வடிவேல், விசாரணை நடத்திய நிலையில் ஜேசு பாலனை கைது செய்யப்பட்டனர்.

 தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad