திருநெல்வேலி டாண் சிட்டி லயன் சங்கம் சார்பாக பாளை மாநகராட்சி அங்கன்வாடி நர்சரி பள்ளியில் குழந்தைகள் தின விழா மரக்கன்றுகள் நடு விழா மற்றும் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டாண் சிட்டி லயன்
சங்கத் தலைவர் தேசிய நல்லாசிரியர் லயன் பொன்ராஜ் தலைமை வகித்தார்.பட்டய தலைவர் லயன் ஜானகிராம் அந்தோணி முன்னிலை வகித்தார் .
பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் மாவட்ட அலுவலர் திருநெல்வேலி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் லயன் ரங்கராஜன்,செயலர் ராஜன், லயன் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.நீரழிவு பரிசோதனை கருவி பள்ளிக்கு
வழங்கப்பட்டது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் அஜய் மூலம் இலவச நீரிழிவு பரிசோதனை நடைபெற்றது.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர் லயன் ராதாகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
அங்கன்வாடி ஆசிரியை ஜெய வைதேகி, நர்சரி ஆசிரியை செல்வராணி, பள்ளி ஆசிரியை சைலஜா குமாரி, ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக