உலக நீரிழிவு நோய் நாள் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இலவச நீரிழிவு பரிசோதனை !
காட்பாடி , நவ15 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி லைப் லைன் இரத்த பரிசோதனை மையம் ஆர்.ஐ.சி.டி கல்வி நிறுவனம் இணைந்து உலக நீரிழிவு நாள் முன்னிட்ட விழிப்புணர்வு பேரணியினை காட்பாடி காவல் நிலையம் அருகிலிருந்து புறப் பட்டு வள்ளிமலை கூட்டு சாலை, பெத் தேல் பள்ளி வழியாக கே.ஆர்.எஸ் நகர், வரை சென்று நிறைவடைந்தது.இந்த பேரணிக்கு காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். லைப் லைன் இரத்தப் பரிசோதனைமையத்தின் இயக்குநர் எஸ்.பாபுஜனார்த்தனன் வரவேற்று பேசினார். கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஸ்ரப், வேலூர் இரத்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீம்ஜி பில்டர்ஸ் நிறுவன டி.செந்தமிழன், டி.செல்வம் காட்பாடி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கே.சோகாராமன், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் மற்றும் கல்வி நிறுவன மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பின்னர் லைப் லைன் இரத்த பரிசோத னை நிலையத்தில் நீரிழிவு நோயாளகி ளுக்கு இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், இரத்த அளவு ஆகிய பரிசோத னைகள் இலவசமாக செய்யப்பட்டன. மையத்தின் செவிலியர் வேண்டா, தொழில்நுப் வல்லுநர்கள் ஹேமமாலினி, பவித்ரா குழுவினர் இலவச பரிசோதனை கள் மேற்கொண்டனர். முகாமில் 100 பேர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்ட னர்.
இந்த நிகழ்வில் பேசிய ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது… ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி, உலக நீரிழிவு தினம் நீரிழிவு நோயின் விளைவுகள் மற்றும் நோயால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.நீரிழிவு நோய்க்கான ஆபத்தில் உள்ள நபர்களை பரிசோதிக்க ஊக்குவிப்பதற்காக தகவல் களைப் பரப்புதல்.உலகளவில் நீரிழிவு நோய் ஒரு பெரும் சுகாதார சவாலாக மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் இந்த நோய், நீண்டகால மருத்துவ கவனிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை அவசியப்படுத்து கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி, நீரிழிவு நோயைப் பற்றி உலகமெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரிழிவு தினம் (World Diabetes Day) அனுசரிக்கப்படுகிறது. 2025 உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் “Diabetes & Wellbeing”, நீரிழிவு நோய் என்பது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை சவால் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நாளை முன்னிட்டு, அனைவரும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து, ஆரோக்கி யமான வாழ்வுக்கான சிறிய மாற்றங் களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். என்றார். முடிவில் அகில் லேப் மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக