காட்பாடி துளிர் பள்ளியில் குழந்தைகள் தின விழா!
காட்பாடி , நவ 15 -
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ள துளிர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் முனை வர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். காட்பாடி ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, சேவகன் அறக்கடளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ் ணன், பாத் பைன்டர்ஸ்அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.சுதாகர் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
பள்ளி மாணவ மாணவிகள் டி.தியா, எ.லக்ஷனா, எ.ஶ்ரீனிகா, எஸ்.தனுஷ், எம்.சர்வேஷ், எஸ்.மைதேஷ் தனிஷ், வி.தீபாஶ்ரீ, ஆர்.பி.சுகவாணன் உள்ளிட் டோரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன மேலும் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றன.
முன்னதாக பள்ளியின் தலைமையாசிரி யர் த.கனகா வரவேற்று பேசினார். முடிவில் உதவி தலைமையாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக