காக்கங்கரையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
திருப்பத்தூர், நவ 15 -
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து முடிந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின்
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் கந்திலி மேற்கு ஒன்றியம்,கே என் சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் ஒன்றிய தலைவர், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பேருந்து நிறுத்தம் அருகில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாஜக வெற்றியை கொண்டாடினார்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக