நவ.4 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாவதான நத்தம் (வரகுணமங்கை) விஜயாசன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நாளான ஐப்பசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.
அதனை முன்னிட்டு நேற்று காலை விஸ்வரூபம். 9.30 மணிக்கு ஸ்தபன கலசங்கள் வைத்து ஹோமம் செய்யப்பட்டது 11 மணிக்கு பூர்ணாகுதி. 11.30 திருமஞ்சனம். 12 மணிக்கு தீபாராதனை சாத்துமுறை நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு உற்சவர் எம்இடர்கடிவான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அத்யாபகர்கள் சீனிவாசன். பட்சிராஜன். ராமானுஜன் மதுரகவி. பெரியதிருவடி. சேவித்தனர். பின்னர் தீர்த்தம். சடாரி. பிரசாதம். பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் வள்ளியூர் கோவிந்தன். கண்ணன். ராஜகோபாலன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நிசாந்தினி. அறங்காவலர் குழு தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். சீனிவாசா அறக்கட்டளை களப்பணியாளர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக