நெல்லை - பேருந்து நிலையத்தில் பெண்களுக்கென பிரத்யேக ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 நவம்பர், 2025

நெல்லை - பேருந்து நிலையத்தில் பெண்களுக்கென பிரத்யேக ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

உலக நாடுகளே வியக்கும் வண்ணம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள அதே நேரம் நெல்லையில் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க கூட வசதியின்றி சாலையிலேயே காத்திருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்.

பேருந்து நிலையத்தில் பெண்களுக்கென பிரத்யேக ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்..

ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல்வேறு துறைகளிலும் தங்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர். பயணிகள் ஆட்டோ தொடங்கி பேருந்து விமானம் என அனைத்தையும் இயக்கும் திறமைப் படுத்தவர்களாக வளர்ந்துள்ளனர். குறிப்பாக ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் சாதித்து வந்த நிலையில் இந்திய பெண்களும் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் உச்சபட்ச சாதனையை படைத்துள்ளனர்.


இந்த நிலையில் நெல்லையில் மாநகரப் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்

நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். காலையில் வீட்டை விட்டு புறப்பட்டால் சாலையில் தான் வாழ்க்கை எங்களுக்கென்று தனி ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று இல்லை ! அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் கூட புதிய பேருந்து நிலையம் கழிப்பறைக்கு செல்ல வேண்டும். 

அல்லது வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த நிலை மாறுவதற்கு நெல்லை மாநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனியாக ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்பாடு செய்து தர வேண்டும். அதிகமான பயணிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். 

இப்போது 17 பேர் ஆட்டோ ஓட்டி வருகிறோம் மேலும் 20 பேர் பயிற்சி பெற்று நிற்பதற்கு உரிய ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் வர முடியாமல் உள்ளனர் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும். எனவே எங்களுக்கு ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
பேட்டி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad