தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குமாறு வேண்டி ஏரல் கணேசபுரம் (வார்டு-15) பகுதியில் கடந்த 120 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து காட்டு நாயக்கர் சமூக மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏரலின் காட்டு நாயக்கர் சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுச் சலுகைகளை பெற முடியாமல் தவிக்கும் நிலையை மனுவில் விளக்கினர். ஜாதி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் சிக்கலால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பலர் பாதியில் கல்வியை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அவர்களது பாரம்பரிய தொழிலான பன்றி வளர்ப்பு மற்றும் குறி சொல்வது போன்ற குலத்தொழில்களின் சுமையை இன்றும் இளம் தலைமுறையினர் தாங்கி வருவது வேதனையளிப்பதாக கூறப்பட்டது.
குலத்தொழிலை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், எங்களுக்கும் உரிய சலுகைகளை பெற ஜாதி சான்றிதழ் அவசியம் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.காட்டு நாயக்கர் சமூகத்தினரின் உறவினர்களின் சாதி சான்றிதழ்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டன.
இந்த மனுவை புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மாரி செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.
இந்த நிலையில் மனு அளிக்கும் நிகழ்வில் மின்னல் அம்ஜத், மக்கள் அதிகாரக் கழகம் தாளமுத்து செல்வா, விசிக ஏர்ல் நகர செயலாளர் முத்து லிங்கம், திருவைகுண்டம் அமைப்பாளர் முத்து ராஜ், சிபிஎம்எல் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமர், மாவட்ட புரட்சி பாரதம் கட்சி பொறியாளர் மகேந்திரன், உட்பட காட்டு நாயக்கர் சமூக மக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு, உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ் மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக