கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொல்லவிளை தங்கம்நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் - பிரதிபா தம்பதியரின் பத்து வயது மகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதே பகுதியை சேர்ந்த மகிழன் மற்றும் அவரது மகன் காட் பிரே வளர்த்து வந்த வளர்ப்பு நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்தது.
இதனை சிறுமியின் பெற்றோர் நாய் உரிமையாளர்களிடம் தட்டி கேட்டபோது மகிழன் மற்றும் அவரது மகன் காட் ஃப்ரே இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர்.இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் சம்பந்தமாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக