திருச்செந்தூர் கோவில் நகரம் துர்நாற்றம் வீசும் நகராக மாறியுள்ளதால் - தமிழ்நாடு வணிகர் சங்கம் முதலமைச்சருக்கு மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 நவம்பர், 2025

திருச்செந்தூர் கோவில் நகரம் துர்நாற்றம் வீசும் நகராக மாறியுள்ளதால் - தமிழ்நாடு வணிகர் சங்கம் முதலமைச்சருக்கு மனு.

திருச்செந்தூர் கோவில் நகரம் துர்நாற்றம் வீசும் நகராக மாறியுள்ளதால் - தமிழ்நாடு வணிகர் சங்கம் முதலமைச்சருக்கு மனு.

திருச்செந்தூர் ஒன்றியம், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு மேனிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 

இப்பள்ளி வளாகத்தினுள் வட்டாரக் கல்வி அலுவலகம், வட்டார வளமைய அலுவலகம், ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் பள்ளி, பள்ளிக் வடிவிலான பல்நோக்கு திட்டக் கட்டிடம் இயங்கி வருகின்றது.

அரசு மேனிலைப்பள்ளியில் சுமார் 528 மாணவர்களும் 26 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலக பணியார்களும், வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 10 அலுவலகப் பணியார்களும், 

இவ்வலுவலகத்தின் கீழ் 30 ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களும் 54 உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆக மொத்தம் 318 ஆசிரியர்களும் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சுமார் 30 மாணவர்களும், ஆசிரியர்களும், பல்நோக்கு திட்ட பணியாளர்களும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சென்று பணியாற்றும் இடமாகும்.

பேருந்து நிலையத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறையின் நீர் வெளியேறி பள்ளி நுழைவு வாயில் அருகில் திறந்த வெளியில் தேங்கி, பொதுமக்கள் யாரும் நடமாடாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் அலுவலக சுவரை ஒட்டியுள்ள கால்வாய் பொதுக் கழிவறையின் கழிவுநீர் கலந்து மூடப்படாத கழிவுநீர் வாய்க்காலாக நிரம்பி வழிந்து பள்ளி வளாகத்தினுள் தேங்கி சுகாதாரக் கேட்டை உண்டாக்குகிறது.

மேனிலைப்பள்ளிக்கு வருகின்ற ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த கழிவுநீரைக் கடக்க சொல்லொண்ணா துயரை அடைந்து பள்ளிக்கு வருகின்றனர். 

அலுவலகப் பணியாளர்கள் துர்வாடையின் தாக்கத்தை தவிர்க்கும் பொருட்டு அலுவலக பணிசெய்ய முடியாமல் ஜன்னல், கதவுகளை மூடிவிட்டு வேலை செய்வதால் உயரதிகாரிகளின் நெருக்கலுக்கு ஆளாகின்றனர். 
அன்றாட அரசுப் பணிகளை வகிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது
இந்த சூழலில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், உடல் நலக் கேடுகள், திடீர் குமட்டல், வாந்தி, தலைவலி, நுரையீரல் தொற்று, காய்ச்சல் ஏற்படுகிறது. 

இதனால் பள்ளி மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து மாணவர்கள் இடைநிற்றல் அதிகம் ஏற்படுகிறது. மாற்றுத் திறனாளி மாணவர்களின் நிலையும், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலக பணியாளர்களும், வட்டாரக் கல்வி அலுவலகம் பணியாளர்களும் அன்றாட அரசு பணிகளை கவனிப்பதிலும், அலுவலகப் பணிகளை சரிவரசெய்ய இயலாத நிலையில் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அலுவலகப் பணிகளை சரிவரசெய்ய இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

நாளது தேதி வரை இதன் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகர்கள் அனைவரும் உடல்நிலை மோசமடைந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு, தொற்றுநோய் பரவி, நிலைமை தீவிரமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டு ஊடக வெளிச்சத்திற்கு வரும்முன் 

கழிவுநீர் கசியாதபடி கட்டுமானங்களை சரி செய்திடவும், திறந்த நிலையில் உள்ள கால்வாயை மூடி, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேங்கிநிற்கும் கழிவுநீரில் லட்சக்கனக்கான கொசுக்கள் உள்ளன. 

இந்த கொசுக்கள் மேலும் கோடிக்கனக்கான முட்டைகளிட்டு கொசு பண்ணையாகி உள்ளது. இதன் மூலம் யானைக்கால் வியாதி, சிக்கன் குனியா, மலேரியா, டெங்கு போன்றவியாதி பரவ உள்ளது. ஆகையால் அரசும் சுகாதார துறையும் இதில் அதிக கவனம் செலுத்தி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கின்றோம்.

என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad