திருநெல்வேலி, நவ. 20, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சகிதம் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மெட்ரோ ரயில் திட்டம் குறித்துத் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நடந்த இந்தச் சந்திப்பில், அவர் சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகளைச் சாடி, சரமாரிக் குற்றச்சாட்டுகளை அடுக்கிப் பேசினார்.
விவசாயிகள் நலன் குறித்து:
தென்னிந்திய இயற்கை வேளாண் பொருட்கள் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியை, குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகக் கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையில்லை. நாடு முழுவதும் ₹18,000 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். மத்திய அரசு குழு பார்த்துவிட்டுச் சென்றதில், நெல் ஈரப்பதம் 17% முதல் 21% வரை இருந்தது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர் மாடசாமி திருநெல்வேலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக