குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் நமது கடமை நமது பெருமை சுதேசி உறுதிமொழி ஏற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 நவம்பர், 2025

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் நமது கடமை நமது பெருமை சுதேசி உறுதிமொழி ஏற்பு !

குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் நமது கடமை நமது பெருமை சுதேசி உறுதிமொழி ஏற்பு !
குடியாத்தம் , நவ.20 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேத்து வண்டை பகுதியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை. வந்தே மாதரம் பாடலைப் பாடி சுதேசி வாழ்வியல் நமது கடமை நமது பெருமை என்று சுதேசி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செய லாளர் .பி  கார்த்தியாயினி ஜி மற்றும் மாவட்ட தலைவர்  தசரதன் விநாயகம் ஜி ஆகியோரின் வழி காட்டுதலின் படி 
மகளிர் அணி மாவட்ட தலைவர் .சுகன்யா ஜி தலைமையில் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில்  700 குழந்தை செல்வங்கள் 20 ஆசிரியர்கள் வேலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், வேலூர் மாவட்ட நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள், .கே.வி.  குப்பம்ஒன்றிய நிர்வாகிகள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை பாடி சுதேசி வாழ்வியல் நமது கடமை சுயசார்பு பாரதம் நமது பெருமை என்று சுதேசி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad