மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 நவம்பர், 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு !

மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு ! 
ராணிப்பேட்டை , நவ 20 -

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா அரக்கோணம் வட்டம் மின்னல் ஊராட்சி,  சாலை, NLP திருமண மண்டபத்தில் இன்று  நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாமில்  57 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கி னார்கள்.முன்னதாக, முகாம் நடைபெறு வதையும், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதை யும் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளி டம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.
இம்முகாமில் 162 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 57 நபர்களு க்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, 82 நபர்களுக்கு UDID  தேசிய அடையாள அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப் பட்டது. மேலும், 11  மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.தொடர்ந்து, மாற்றுத்தி றனாளிகள் நலத் துறை சார்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு  தலா ரூ.18,000/-  வீதம் ரூ.36 ஆயிரம்  மதிப் பீட்டிலான  சக்கர நாற்கலியையும், 1 மாற்றுத் திறனாளிக்கு  ரூ.4 ஆயிரம் மதிப்பீட்டிலான காதொலிக் கருவி யையும்  வழங்கினார்கள். இந்த சிறப்பு 
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் வட்டாட்சியர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad