தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து.

தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் ‌விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளான உரங்கள், பயிர் காப்பீடு, கடன், நீர்ப்பாசனம், மற்றும் பிற விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரிய தீர்வுகளைப் பெறுவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். 

அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை 20.11.2025 காலை 10.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை 20.11.2025 காலை 10.00 மணிக்கு நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad