இரு சக்கர வாகனததில் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் அமர்ந்து இருந்து மனைவி நிலைத்தடுமாரி கீழே விழுந்து பலி!
வாணியம்பாடி, நவ்.19-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியைசேர்ந்தவர் அப்புன் (வயது 35). இவரது மனைவி புஷ்பராணி(வயது 28).இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தனது ஐந்து வயது குழந்தைக்கு குளிர்காலம் என்ப தால் ஸ்வட்டர் வாங்குவதற்காக அப்புன் மற்றும் அவரது மனைவி புஷ்பா ராணி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது பத்தாபேட்டை அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக தெருநாய் குறுக்கே வந்ததால் அப்புன் உடனடியாக இருசக்கர வாகனத்தின் பிரேக் போட்டதால் எதிர் பாராத விதமாக பின்னர் அமர்ந்து கொண்டு இருந்த மனைவி புஷ்பா ராணி நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த புஷ்பா ராணியை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் புஷ் பராணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வாணி யம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக