தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்து தேர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 நவம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்து தேர்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்து தேர்வு 6 மையங்களில்7556 தேர்வை எழுதுகின்றனர் கடும் சோதனைக்கு பின்பு தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று தமிழக முழுவதும் இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறைகாவலர் தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது இந்த தேர்வை 7556 தேர்வர்கள் எழுதுகின்றன.

தேர்வு மையங்களில் கடும் சோதனைக்கு பின்பு தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு டிரைவிங் லைசன்ஸ் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஏதாவது ஒரு ஒரிஜினல் சான்றை கொண்டு வர வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன் கால்குலேட்டர் எலக்ட்ரானிக் வாட்ச் ப்ளூடூத் ஆகியவை தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு தூவங்கக்கூடிய தேர்விற்கு காலை 9.30 மணிக்குள் முள்ளகாடு மையங்களுக்கு வரக்கூடிய தேர்வர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுபவர் எனவும் விதிமுறைகளை கடைப்பிடித்து விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad