நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 நவம்பர், 2025

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்குரிமை பெற்று தருவது, இல்லாதவர்களின் வாக்குகளை படிவத்தில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரைப்பது என முக்கிய ஆலோசனைகள் வழங்கும் வகையில் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கான ( BLA 2 - Booth level Agent 2 ) சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நெல்லை உடையார்பட்டி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று குறித்த மிக முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதன்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது ? 
வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணி செய்வது ? 

புதிய வாக்காளர்களை கண்டறிந்து அவர்களுடைய ஓட்டுரிமை விண்ணப்பத்தை முறையாகப் பெற்றுத்தருவது மற்றும் தொகுதியில் இறந்தவர்களின் வாக்குகளை கண்டறிந்து அதனை முறையாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முத்து பலவேசம், மாவட்ட பொது செயலாளர் MP. நாகராஜன், தேர்தல் பார்வையாளர் நீல முரளி யாதவ், மற்றும் இணையமைப்பாளர் முத்துக்குமார், பொறுப்பாளர் தளபதி பிச்சையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad