வாழை தோட்டத்தில் கஞ்சா செடிவளர்த்த விவசாயி கைது - கஞ்சா செடிகளை பறி முதல் செய்து போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 நவம்பர், 2025

வாழை தோட்டத்தில் கஞ்சா செடிவளர்த்த விவசாயி கைது - கஞ்சா செடிகளை பறி முதல் செய்து போலீசார் விசாரணை !

வாழை தோட்டத்தில் கஞ்சா செடிவளர்த்த விவசாயி கைது - கஞ்சா செடிகளை  பறி முதல் செய்து போலீசார் விசாரணை !
குடியாத்தம் ,நவ.27 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம்  பகுதியில் கண்ணையன் .62 என்ற விவசாயிக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப் பதாக வந்த ரகசிய தகவலின் அடிப் படையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் திடீரென வாழைத்தோட்டத்தில் சோதனை செய்த னர் அப்பொழுது சுமார் 6  அடியில்  கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து வாழைத்தோட்டத்தில் இருந்த கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் மேலும் விவசாயி கண்ணையன் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
வாழைத்தோட்டத்தில் ஆளுயர  கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad