திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி அவருடைய மனைவி குப்பாத்தாள் இவரது கணவர் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இவர் வீட்டின் அருகே. நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தாராபுரம்-திருப்பூர் சாலையில் கோவை நோக்கி . கார் கண் இமைக்கும் நேரத்தில், குப்பாத்தாள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குப்பாத்தாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தளர். ஆனால் அரசு மருத்துவ மனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கோவையை சேர்ந்த கார் டிரைவர் மதன்குமார் (36) மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக