தாராபுரத்தில் முதியவர் கொலை மர்மம் உடைந்தது!.. யாசர் அரபாத் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 நவம்பர், 2025

தாராபுரத்தில் முதியவர் கொலை மர்மம் உடைந்தது!.. யாசர் அரபாத் கைது!


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:

மதுரை வடுகப்பட்டி – ஸ்ரீராமலு மகன் பசுபதி (60) கொலை வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் கண்டுபிடிக்கப்பட்டது. முன்பே செல்பேசி பறிப்பு மற்றும் கஞ்சா வழக்கில் போலீஸ் பதிவுகள் கொண்ட தாராபுரம் ஜீவா காலனி – சாதிக் மகன் யாசர் அரபாத் (22), இந்தக் கொடியக் கொலைக்குப் பின்னணி அமைத்த முக்கிய நபராக போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளார்


மது குடிக்கலாம் என நம்ப வைத்து காட்டுக்குள் அழைத்துச் சென்ற சூழ்ச்சி, கொடிய வஞ்சகம்.


பசுபதி, கடந்த 17ஆம் தேதி தாராபுரம் பேருந்து நிலையம் வந்த போது, யாசர் அரபாத் ‘‘ஐயா… உங்களை நல்லாவே அறிவேன்… எங்க தாத்தா மாதிரி தான் நீங்க… இன்று எனக்கு மனசு ரொம்ப சோர்ந்துருக்கு… யாரோடாவது சேர்ந்து சரக்கு அடிக்கணும்… டாஸ்மார்க்-ல நல்ல பிராண்டி வாங்கி வைத்திருக்கேன்… வாங்க, சேர்ந்து குடிச்சிட்டு என் மனக்கசப்பை சொல்லிக்கணும்…’’ என்று போலி பாசம் காட்டி ஏமாற்றினார்.


பின்னர் பசுபதியை பைக்கில் கூட்டிக்கொண்டு, பத்மாவதி நகர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் உட்கார்ந்து ஜாலியாக மது அருந்தத் தொடங்கினர். சில நிமிடங்களில் போதை ஏறியதும், அரங்கேறியது இன்னொரு கொடூர அத்தியாயம்.


“டேய் கிழட்டு பயலே!” – மதுப் போதில் வெடித்த கோபம், மிரட்டல், பின்னர் கொலை


யாசர் அரபாத், ‘‘எங்கிட்ட இருந்த காசு தீர்ந்து போச்சு… உனக்கு சரக்கு வாங்கி கொடுத்தேன்… நீ குடிச்சிட்ட… இப்ப உன் பாக்கெட்டுல இருக்கிற காசை கொடு… மறுபடியும் சரக்கு வாங்கணும்…” என்று வலியுறுத்த, பசுபதி, ‘‘தம்பி… நான் பாட்டில் போயிட்டு இருந்தேன்… நீங்கதான் அழைச்சீங்க… என்னப்பா இப்படி பண்றீங்க…’’ என கூறியும் பயன்படவில்லை.


யாசர், ‘‘நான் நல்லவன் தான்… ஆனா மது குடிச்சா மட்டை ஆயிடுவேன்… அந்த மாதிரி இப்ப இருக்கேன்…’’ என சத்தமாக மிரட்டி, பசுபதி எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று கையில் குத்தி தாக்கினார். பின்னர் கழுத்தில் காலால் மிதித்து, பசுபதியிடம் இருந்த ரூ.1,700 பறித்து தப்பி ஓடினார்.


  உயிருக்கு போராடிய முதியவரின் சத்தம்… 108 ஆம்புலன்ஸ்… ஆனால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை


‘‘அப்பா… காப்பாத்துங்க… ஒருத்தன் அடிச்சுட்டு போயிட்டான்… மூச்சு வாங்க முடியல…’’ என அலறியபடி கிடந்த பசுபதியை கண்ட அப்பகுதி நபர் உடனே 108-க்கு தகவல் தெரிவித்தார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பசுபதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மருத்துவர் பிரவீன் குமார் நடத்திய பிரேதப் பரிசோதனையில், ‘‘இவர் மர்மமான தாக்குதலால் இறந்துள்ளார்’’ என உறுதி செய்யப்பட்டது.



---


போலீஸ் வேட்டை தீவிரம் – CCTV காட்சியில் யாசர் அரபாத்!


போலீசார் வழக்கை தீவிரப்படுத்திய நிலையில், சுற்றுப்புற கண்காணிப்பு கேமரா காட்சிகளில் யாசர் அரபாத் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.


7 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தேடிய போலீசார், இறுதியாக யாசர் ஒளிந்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அவர் தப்பிச் செல்வதை தடுத்து, முற்றுகையிட்டு பிடித்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.



---


கவனிப்பில் உண்மையை ‘புட்டு புட்டு’ வைத்தார் — பின்னர் ஒப்புதல்


போலீசார் வழங்கிய கவனிப்புகள் மற்றும் கடுமையான விசாரணையை தாங்க முடியாத யாசர் அரபாத், நடந்த சம்பவத்தை ஒன்றும் விடாமல் ‘புட்டு புட்டு’ வைத்தார். குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்ட அவர், தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


நீதிபதி, ‘‘உள்ளூர் கிளைச் சிறையில் வைத்தால் தப்பும் வாய்ப்பு உள்ளது’’ என்ற போலீஸார் கருத்தை ஏற்று, அவரை கோவை மத்திய சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.



நல்லவன் போல் நாடகம் ஆடி முதியவரை ஏமாற்றி கொன்ற சம்பவம் — தாராபுரத்தில் பரபரப்பு!


நாடகம் போட்டு முதியவரை நம்ப வைத்து கொலை செய்த இந்த வஞ்சக பின்னணி, தாராபுரம் பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad