குடியாத்தம் அடுத்த பரதராமி துவக்கப் பள்ளியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் நடவடிக்கை எடுக்க கோரி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

குடியாத்தம் அடுத்த பரதராமி துவக்கப் பள்ளியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் நடவடிக்கை எடுக்க கோரி!

குடியாத்தம் அடுத்த பரதராமி துவக்கப் பள்ளியில் குளம்  போல் தேங்கி நிற்கும் மழை நீர்  நடவடிக்கை எடுக்க கோரி!
குடியாத்தம் , நவ 19 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் . அடுத்த பரதராமி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 50 நாட்களாக குளம் போல்  தேங்கி நிற்கும் சாக்கடை மற்றும் மழைநீர் இதனால் இப்பள்ளியில் படிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருகில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளார்கள் இது  சம்பந்தமாக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராஜ் என்பவர் கொடுத்த தகவலின் படி பள்ளியின் பக்கவாட்டில் பெரிய கால்வாய் இருந்தது தற்போது  ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள் ளார்கள் இதனால் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லை மழை நீர் வெளி யேற்றினால் மட்டுமே பள்ளி நடைபெறும் என்று தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவாலு கூறியது இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களு க்கு தகவல் தெரிவித்தும் நீர் தேங்கி உள்ள இடத்தை பார்வையிட்டு இது சம்பட்ட அதிகாரியிடம் உடனடியாக பள்ளியில் உள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும் என  தெரிவித்ததாக என ஊராட்சி மன்ற தலைவர் இதனை தெரிவித்தார் இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பள்ளியில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் விஷ காய்ச்சல் நோய் பரவும் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளன உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad