ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த கண்டைனர் பறி முதல் 2 பேர் கைது!
குடியாத்தம், நவ 19 எ
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி மயில்வாகனம் உத்தரவின் பெயரில் பரதராமி போலீஸ் சார் இன்று தமிழக ஆந்திர எல்லையான பரதராமி போலீஸ் சோதனை சாவடியில் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர் அப்பொழுது ஆந்திராவில் இருந்து பரத ராமி வழியாக தமிழ்நாடு மாநிலத்திற்கு குடியாத்தம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்
அதில் டிரைவர் சீட்டுக்கு அடியில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது
பின்னர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்
மேலும் லாரி டிரைவர் மதுரை மாவட்டம் அனுப்புண்டி பகுதி வடக்கு தெருவை சேர்ந்த சஞ்சீவி மகன் பாபு (வயது 32) லாரி கிளீனர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் ராஜ்குமார் (வயது 25) ஆகியோரை கைது செய்து கஞ்சா மற்றும் கண்டெய்னரை பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக