அறிஞர் அண்ணா காந்திநகர் மாவட்ட கிளை நூலகத்தில் 58 வது நூலக வார விழா!
காட்பாடி , நவ 19 -
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 58 வது நூலக வார விழா 19.11.2025 காலை 9.30 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.வாசகர் வட்ட தலைவர் வி.பழனி தலைமை தாங்கினார். முன்னதாக துணைத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன் வர வேற்று பேசினார். பள்ளியின் தலைமை யாசிரியை எஸ்.பிரேமா முன்னிலை வகித்து பேசினார்.
ஓய்வு பெற்ற பேராசிரியை எம்.எஸ். கலைச்செல்வி அவர்கள் 100 மாணவி களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார். வாசகர் வட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், எஸ்.எஸ்.சிவ்வடிவு, ஆர்.விஜயகுமாரி, ஆறுமுகம், உள்ளிட்டோர் பேசினர்.
பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின்
முடிவில் நல்நூலகர் தி.மஞ்சுளா எ.சத்ய வாணி ஆகியோர் நன்றி கூறினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
(வி.பழனி, வாசகர் வட்ட தலைவர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக