திருப்பத்தூரில் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் எச்சரிக்கை!
திருப்பத்தூர் , நவ 19 -
திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவேன் என கூறி ஓட்டு வாங்குனீங்க? ஆனால் அமுல் படுத்தவில்லை, அடுத்த முறை ஆட்சி மாறும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் லாட்ஜ் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதாவது அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணி யாளர்கள், உள்ளிட்டோர் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கூறி பத்து அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக் கரசு முன்னதாக தேர்தல் நேரத்தில் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு கேட்கும் பொழுது அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஓட்டு போட்டால் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேன் எனக் கூறினார் ஆனால் தற்போது வரை அந்த திட்டத்தை அமல்படுத்தவில் லை இன்னும் ஆறு மாத காலத்தில் தேர்தல் நெருங்குகிறது. உடனடியாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வில்லை என்றால் அடுத்த முறை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறினார். இந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக