மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங் கில் மத்திய சமூக நீதி மற்றும் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) சார்பில் விழிப்புணர்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங் கில் மத்திய சமூக நீதி மற்றும் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) சார்பில் விழிப்புணர்வு !

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங் கில்  மத்திய சமூக நீதி மற்றும் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) சார்பில் விழிப்புணர்வு !
திருப்பத்தூர் , நவ 19 -

 திருப்பத்தூர் மாவட்டம் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை யில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலமாக நாஷாமுத் பாரத் அபியன் எனும் திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் திருப்பத்தூர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் “என் எதிர்காலம், என் தேர்வு  போதைப் பொருள் வேண்டாம்"  என்ற தலைப்பின் கீழ்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி  தலைமை யில் அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள்,  தன்னார்வலர்கள், அடங் கிய சுமார் 200 பேர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியி னை ஏற்றுக் கொண்டனர். மேலும் போதை பொருள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் மற்றும் போதைப் பொருளி னால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அரசு மனநல மருத்துவர் ஹரிதா மாணவ மாணவிகளிடையே உரையாற்றினர்.  
தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர்... மாணவர்கள் அனைவரும் உயர் கல்வியுடன் நின்று விடாமல் கட்டாயம் வேலைகளுக்கு சென்று அவர்களது பொறுப்பை உணர்ந்து நல்வழியில் நடக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் போதைப்பொருள் உள்ளிட்ட தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாமல் நண்பர்களு டன் பழகினாலும் உங்களது உற்ற நண்பனாய் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுங்கள்.  நல்ல புத்தகங்கள் மட்டுமே உங்களை உண்மையான நல்வழியில் அழைத்துச் சென்று வாழ்வில் உங்கள் குறிக்கோளை அடைய உறுதுணையாக இருக்கும். படிப்பு வேலை போன்ற நற்சிந்தனைகளில் குறிக்கோளை வைத்து தேவையற்ற பழக்கங்களில் சென்று விடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ ) ஜெயகமல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் மன நல மருத்துவர் ஹரிதா மற்றும் அரசு துறை அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad