18 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் பங்கேற்பு!
திருப்பத்தூர் , நவ19 -
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி திருப்பத்தூர் மாவட்ட துணைத்தலைவர் TNSOU பூபதி தலைமையில் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்றது. மேலும் நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மேல் தரம் உயர்த்தி வழங்க வேண்டும், துணையாய்வாளர் ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைத்திட வேண்டும், புதியதாக அறிவித்துள்ள நகராட்சிக்கு நகரசார் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றி லும் கைவிட்டு காலம் முறை ஊதியத்தில் பணி அமைத்திட வேண்டும் என 18 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.மேலும் இதில் திருப்பத்தூர் மாவட்ட நில அளவை அலுவலர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.உடன் இந்த போராட்டத் தின்போது திருப்பத்தூர் கோட்டத் தலைவர் பனிமலர், மாவட்ட இணை செயலாளர் அசோக் குமார், மாவட்ட பொருளாளர் வினோத் குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக