பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று 30.11 2025 துவங்கப்பட்டது.
எம்பி ஈஸ்வரசாமி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கிணத்துக்கடவு செ.தாமோதரன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக தபால் துறை தலைமை அதிகாரி மரியம்மா தாமஸ், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முபாரக், தபால் துறை மேற்கு மண்டல அலுவலர் சரவணன், பாஸ்போர்ட் சேவை மைய இயக்குனர் கோவேந்தன், கோவை மண்டல கடவு சீட்டு அதிகாரி சதீஷ், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத்தலைவர் கௌதமன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் உருவாக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 452 பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.
அதில் பொள்ளாச்சி 452 வது சேவை மையம் ஆகும். இன்னும் 32 சேவை மையங்கள் துவங்க உள்ளோம்.
தமிழகத்தில் 38 பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 37 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பதை எளிமைப்படுத்துவதற்காக இந்த சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக குரல்
கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக