அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்


திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது 

திருப்பூர் 15 வேலம்பாளையம் சங்கரன் தோட்டத்தில் உள்ள வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமினை சங்க நிருவன தலைவர் ஜி,கே,விவசாய மணி ( எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் பள்ளியின் சார்பில் ஆரம்ப நிலை ஒருங்கிணைப்பாளர் குணசுந்தரி முன்னாள் அவிநாசி ஒன்றிய துணை பெருந்தலைவர் வடிவேல் ஸ்ரீராம் பேஷன் நிர்வாக இயக்குனர் நீலாம்பாள் கார்த்திகேயன் வைரம் ரத்தினவேல் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர் முகாமிற்கு வருகை புரிந்த விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது  வடக்கு மாவட்ட செயலாளர் அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி.. சுப்பிரமணியம் அவர்களுக்கு ரூபகுமார் அவர்கள்   நினைவு பரிசினை வழங்கினார் முகாமில் தலைமை நிலைய செயலாளர் நாகேந்திரன் மாநில தலைமை சங்க பேச்சாளர் சந்திரசேகரன் திருப்பூர் மாநகர துணை தலைவர் செல்வராஜ் மூலனூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி தலைமை நிலைய ஆலோசகர் சென்னியப்பன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர் இம்முகாமில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர் 23 மருத்துவ பயனாளிகள் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு திருப்பூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இந்த முகாமினை மாநில ஊடகப்பிரிவு செயலாளர் குருநாதன், அகிலா, 25 வது வார்டு தொழிலாளர் பிரிவு தலைவர் இ.ரமேஷ் சோளிபாளையம் மகளிர் அணி தலைவி வீரலட்சுமி இளைஞர் அணி செயலாளர் இராஜா இளைஞரணி பொருளாளர் அருள்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் இந்த முகாமில் கலந்து கொண்ட மருத்துவ பயனாளிகளுக்கு  சங்க நிர்வாகிகளுக்கும் காலை உணவு மதிய உணவு வழங்கப்பட்டது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad