வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR)யை கொண்டு வந்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விண்ணை முட்டிய எதிர்ப்பு கோஷங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மக்களின் வாக்குரிமையை பறிக்க துணியும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR)யை, கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு SIR யை கொண்டு வந்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக