தூத்துக்குடியில் மனைவியை கொலை மிரட்டல் வழக்கில் கணவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 நவம்பர், 2025

தூத்துக்குடியில் மனைவியை கொலை மிரட்டல் வழக்கில் கணவர் கைது.

தூத்துக்குடியில் மனைவியை கொலை மிரட்டல் வழக்கில் கணவர் கைது 

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் சாந்தி நகர் 3 வது சேர்ந்த பரமேஸ்வரி (40) இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் (சந்தோஷ் )இருந்ததாக தெரியவந்தது. 

மேலும் மனைவி பரமேஸ்வரி என்பவர் கணவர் இசக்கி பாண்டியை விட்டு 5 வருடங்களாக பிரிந்து தனியா வசித்து வந்ததாக தெரியவந்தது.

இவருடைய கணவர் தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்த
துரைப்பாண்டி மகன் இசக்கி பாண்டி(38) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக(26.11.2025 ) இரவு 10.00 மணி அளவில் மனைவி மற்றும் மகன் சந்தோஷ் என்பவரை தாக்கியதால் மகன் கையில் பலத்த காயம் ஏற்பட்டன. 

இது இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையம் ஆய்வாளர் சண்முகலட்சுமி வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் முகிலரசன் விசாரணை நடத்திய நிலையில் காயம் அடைந்தவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இசக்கி பாண்டி என்பவரை கைது செய்தனர்.


தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad