ரேபிஸ் (காய்ச்சல்) நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதையடுத்து, நாகர்கோவில் மாநகராட்சி முழு நகரிலும் தெருநாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெருநாய்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் சிறப்பு அணிகள் அமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, இன்று நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலப்பெரு விளை பகுதியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள், நாய்கள் தாக்குதல் மற்றும் நோய் பரவல் குறித்து தொடர்ந்து புகார்கள் வருவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட நாய்கள் அனைத்தும் விதிக்கப்பட்ட நடைமுறைகளின்படி மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி, மற்றும் அறுவை சிகிச்சை (ABC programme)க்கு பிறகு மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு செல்லப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தெருநாய்கள் குறித்து காணும் பிரச்சனைகளை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் எனவும், நகரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்காக இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக