மரண கிணற்றில் ஓடுவது போல் இயங்கும் வாகனங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி.
பல வருடங்களாக தார் சாலை அமைக்க மனுக்கள் அளித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மாநகராட்சி சார்பாக 3- முறை அதிகாரிகள் வந்து சாலையை அளந்து சென்றனர்.ஆனால் அவ்வளவுதான் என பொதுமக்கள் கடும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலை முழுவதும் சேறும்,சகதியுமாக தேங்கி,
வாகனங்கள் இயங்க முடியாத நிலை— நடந்தும் கூட
மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அடிப்படை வசதியான சாலை வசதி அமைத்து தருவதில் இவ்வளவு தாமதமா. மாநகராட்சி பகுதிக்கே இந்த நிலையா? என பொதுமக்கள்
கடும் அதிருப்தி.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக