கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில். இதனைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பாக மருத்துவமனை முதன்மை நுழைவாயிலில் டோக்கன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
வாகனங்கள் மருத்துவமனைக்குள் நுழையும் போது டோக்கன் வழங்கி வெளியே வரும் போது அதை திருப்பி பெறும் முறையால் வாகனத் திருட்டு சம்பவங்கள் கணிசமாகக் குறைந்தன. இந்த நடவடிக்கையை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் சார்ந்தவர்கள் பாராட்டினர்.
ஆனால் தற்போது கடந்த மூன்று நாட்களாக, நுழைவாயிலில் காவலர் இல்லாததால் இந்த டோக்கன் நடைமுறை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சம்.
டோக்கன் இல்லாத காரணத்தால் யாரும் எந்த கட்டுப்பாடுமின்றி இருசக்கர வாகனங்களை உள்ளே கொண்டு செல்வதும் வெளியில் கொண்டு வருவதும் வழக்கமாகியுள்ளது.
இதனால் திருட்டு சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மீண்டும் காவலர்களை நியமித்து டோக்கன் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இதனால் வாகனத் திருட்டைத் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்களும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக