கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகரின் முக்கிய நுழைவாயிலாகவும், கனரக வாகனங்கள் புறநகர் பகுதிகளிலிருந்து வந்து இணையும் இடமாகவும் களியங்காடு பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணி முதல் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒரு காவலர் மட்டுமே பணியில் இருப்பது வருந்தத்தக்கது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அவசர ஊர்திகள் மற்றும் முக்கிய வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், போக்குவரத்தை உடனடியாக சீர் செய்யவும், இனி வருங்காலங்களில் இது போன்ற சூழல் ஏற்படாத வண்ணம் கூடுதல் காவலர்களை நியமித்து முறையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையினர் இதில் தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக