ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை ,நவ 5 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தூத்துக்குடியில் நடைபெற்ற ஏழாவது மாநில மாநாட்டின் தீர்மானங்களை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்துக் கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏழு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு
ரூ10 லட்சமும், உதவியாளர்களுக்கு
5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.ஓய்வுபெறும் போது மாதம் ரூ9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மே மாதத்தில் ஒரு மாத முழு விடுமுறை வழங்க வேண்டும்.பேஸ் கேப்ச்சர் முறை யை எளிமைப்படுத்த வேண்டும்93% பதவி உயர்வு வழங்க வேண்டும் காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் பெருமள வில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக