திருப்பத்தூர் மாவட்டம் இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 நவம்பர், 2025

திருப்பத்தூர் மாவட்டம் இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம் இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  பங்கேற்பு!
திருப்பத்தூர் , நவ 14 -

திருப்பத்தூர் மாவட்டம் இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  பங்கேற்பு!
சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழ கத்தில் முதன் முதலாக திருவூர்  என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது என திருப்பத்தூரில் நடைபெற்ற 72ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா வில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 72 ஆவது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ் நங்கை முன்னிலையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று 3300 பயனாளிகளுக்கு 30 கோடி மதிப்பிட்டில்  நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறந்த கூட்டுறவு மையத்திற்கு கேடயம் சான்றிதழ் உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கி னார்.அப்போது பேசிய அமைச்சர்.எ.வ. வேலு சிறுதுளி தான்  ஏரியிலும் ஆறாகவும், அணைகளிலிம் ஓடி மக்கள் பயன்பாட்டிற்கு பெருவெள்ளமாக  வருகிறது,  அந்த வகையில் தான் கூட்டுறவு சங்கங்கள் என்பது முதன் முதலாக சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முதலாக திருவூர்  என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் துவங்கப் பட்டது.இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலம் தமிழகம் தான் தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் துவங்க உந்து சக்தியாக இருந்தவர் வ உ சி அவர்கள் தான் அவர்தான் முதன்முதலாக அயல் நாட்டின் போட்டி போட்டுக் கொண்டு கூட்டுறவு சங்கங்களை உருவாக்கியதன் மூலமாக கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைந்தது,மேலும் மாநிலத்தில் நுகர் பொருள் வாணிக் கிடங்கு, என்று ஒரு அமைப்பு இருக்கும்,  அதுதான், மத்திய அரசிடம் இருந்து  பொருட்களை யெல் லாம் வாங்கி,  அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பும், தற்போது,  2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கிறது என்றால்,  32,000 க்கு மேல் ரேஷன் கடைகள் இருக்கிறது,  என்றால் அவற்றிக்கு, ரேஷன்  பொருட்களை அனைத்தும்  அனுப்பும் பணி  நுகர் பொருள் வாணிபக்கிடங்கில் தான்,
தமிழகத்தில், நுகர்ப்பொருள் வாணிப கிடங்கு  திட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் ஆட்சியில் தான் நுகர்பொருள் வாணிப கழகம் வந்தது,கூட்டுறவு சங்கம் கூட்டுறவு மைய வங்கி, உள்ளிட்ட கூட்டுறவு துறைக்கு  தாயாக இருப்பது கழக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்தது தான் கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது  தாயாக இருப்பவர் தளபதி தான் என பேசினார்.இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,
சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ் நல்லதம்பி வில்வநாதன், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரிய குமார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன். ஜோலார் பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ். கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன் திருப்பத்தூர் நகர சேர்மன் சங்கீதா வெங்கடேசன். ஜோலார்பேட்டை சேர்மன் காவியா விக்டர். துணைச் சருமன் ஏ ஆர் சபியுல்லா. கந்திலி ஒன்றிய செயலாளர். குணசேகரன். முருகேசன் மோகன்ராஜ். கூட்டுறவுத் துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad