திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 நவம்பர், 2025

திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்!

திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி  வழங்கல்!
திருப்பத்தூர் , நவ 14 -

திருப்பத்தூர் மாவட்டம் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு விலை இலலா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
 இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு விலையில்லா மிதி வண்டி வழங்கினார் பின்னர் அவர் உரையாற்றிய போது, மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கி னாலும், எங்கள் மாநிலத்தின் அடையா ளம் தாய்மொழியான தமிழ் தமிழ் நாட்டுக்கு ஏற்றது இருமொழிக் கொள்கை மட்டுமே” என்று கூறினார்.இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட ஒன்றிய குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார். திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன் . துணை சேர்மன் ஏ ஆர் சபியுல்லா. ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி. மாவட்ட கல்வி அலுவலர் புண்ணிய கோடி. ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்துகொண்டனர் .மாணவிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad