பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து துளிர் திறனறிதல் தேர்வு!
வேலுர், நவ 28 -
வேலூர் மாவட்டத்தில் 31 மையங்களில் 878 மாணவ மாணவிகள் துளிர் திறனறிதல் தேர்வெழுதினர்.
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாண வர்களிடையே இயற்பியல், வேதியில், உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில் நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகை யில் அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்ததி வருகிறது. 27வது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு 31 மையங்களில் 878 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட துளிர் வினாடி வினா போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் முத்து.சிலுப்பன் தலைமையில் தலைவர் பேராசிரியர் பே.அமுதா செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் இணை செயலா ளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்.கோட்டீஸ்வரி துணைத்தலைவர் கே.விசுவநாதன், பொருளாளர் வீ.குமரன், இணை ஒருங்கிணைப்பாளர் சுகுமார், பொன்.வள்ளுவன், சி.எப்சி, காட்பாடி தாளாளர் திருநாவுக்கரச கிளை தலைவர் ஆர்.சுதாகர் தலைமையாசிரியர் எம்.சினேகலதா, பி.கவிதா, த.கனகா, பி.உமாமகேஸ்வரி, தமிழாசிரியர் வாரா, டி.புகழேந்தி, எ.ஷகநாஸ் பாத்தீமா, பி.ஹேமலதா, வி.எ.நஸ்ரின்பானு, செல்வகுமாரி, பிரகாஷ், எஸ்.நிர்மலா உள்ளிட்ட குழுவினர் தேர்வினை மேற்பார்வையிட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பெருமுகை, அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி சாந்தினிகேதன் மெட்ரிக் பள்ளி, சத்து வாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி, சாய்நாதபுரம் என்.கே.எம், டான்பாஸ்கோ, பேர்ணாம்பட்டு நுசருத்துல் இஸ்லாம் ஆகிய அரசு நிதிஉதவி பள்ளிகள், வ.உசி. நகர், எட்டியம்ன் கோயில், ஏரிப்புதூர், பெரிய தாமல் செருவு, ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், மற்றும் வேலூர் ஆர்.என்.பாளையம், ஊசூர் மகளிர், வேலப்பாடி மகளிர், கொசப் பேட்டை, பொய்கை மகளிர், காங்கேய நல்லூர் ஆண்கள் மற்றும் மகளிர் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கள் மேலும் துளிர் காந்திநகர், பி.கேபுரம், அமைதிபூங்கா, ஆகிய நர்சரி பிரைமரி பள்ளிகள் மற்றும் மேல்மணவூர், எட்டியம் மன் கோயில், பென்னாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளி லும், குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளி என மொத்தம் 31 மையங்களில் 878 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது… தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அவர்களின் செயல்முறை களின் அடிப்படையில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழு வதும் சுமார் 65000 மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வழங்கப்பட்டது. நான்கு விடைகளிலிருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் வகையில் துவக்க நிலை மாணவர்களுக்கு 50 கேள்விகளம் மற்ற மூன்ற நிலை மாணவர்களுக்கு 100 வினாக்கள் கேட்டக்கப்பட்டது. துவக்க நிலை 4 மற்றும் 5ஆம் வகுப்பு இளநிலை 6,7,8ஆம் வகுப்பு, உயர்நிலை 9,10 வகுப்பு மேல்நிலை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என 4 நிலைகளில் கேள்வித்தாட்கள் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டது. மாணவர்கள் விடையளிக்க ஓ.எம்.ஆர் முறையில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சில் அல்லது பேனாவினால் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மாணவர்களுக்க 5 இலக்க தேர்வு எண் வழங்கப்பட்டு தேர்வு எழுதினர். தேர் வெழுதும் 4,5ஆம் வகுப்பு மாணவர்களு க்கு குழந்தைகள் துளிர் என்ற மாத இதழ் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களக்கு விஞ்ஞான துளிர், அல்லது ஜந்தர்மந்தர் தமிழ் அல்லது ஆங்கில அறிவியல் இதழ் 11 மாதங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாக்கள் இயற்பியல், வேதியில், உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும், அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப துளிர் அறிவியல் மாத இதழ் அல்லது ஜந்தர் மந்தர் ஆங்கில இருமாத இதழ் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். மாவட்ட அளவில் மற்றும்மாநில அளவில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்களுக்க அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றம் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும் என தெரிவித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக