வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் !
வேலூர் , நவ 11 -
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெறுதல் தொடர்பான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (11.11.2025) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன் (வேலூர்), வேலூர் வருவாய் கோட் டாட்சியர் செந்தில் குமார் (அணைக் கட்டு), குடியாத்தம் வருவாய் கோட்டாட் சியர் செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன் (காட்பாடி), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் (கீ.வ.குப்பம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக