குடியாத்தத்தில் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

குடியாத்தத்தில் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து!

குடியாத்தத்தில் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து!
குடியாத்தம் , நவ 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 15. சீவூர் மதுரா முனாப் டிப்போ பகுதியில் வசித்து வரும் ரஹமத் க/பெ மௌலானா (வயது 40) என்பவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை 5.00 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டிலிருந்த ஆடைகள் மற்றும் சில வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து  உள்ளது  தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுதீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அனைத்தனர் இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை பொருட் சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது. ரஹமத்  கணவர் மௌலானா  பீடி வேலை செய்து வருகிறார். இவருக்கு நான்கு பெண் நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளனர். என்று தெரிய வருகிறது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad