நாசரேத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 நவம்பர், 2025

நாசரேத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

நாசரேத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

நவம்பர் 28, நாசரேத் பேரூர்கழக தி.மு.க சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழாவில் கே.வி.கே.சாமி சிலை, பேரூந்து நிலையம், சந்தி ஆகிய இடங்களில் இனிப்பு வழங்கியும், திருமறையூர் முதியோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கப்பட்டது. பின்பு 50பெண்களுக்கு சேலையும், 50ஆண்களுக்கு பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியில் நகர அவைதலைவர் கருத்தையா தலைமை தாங்கினார், நாசரேத் பேரூர்கழக செயலாளர் ஜமீன் சாலமோன், மூக்குப்பேறி கிளை கழக செயலாளர் அருள்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த விழாவில் நகர பொருளாளர் சுடலைமுத்து, நகர துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், ஒன்றிய பிரதிநிதிகள் ஞானராஜ், தேவதாஸ், மாணிக்கராஜ், ராமச்சந்திரன், நகர தகவல் தொழில்நுட்பஅணி அமைப்பாளர் ராஜ்குமார், வார்டு செயலாளர்கள் உடையார், மாற்கு தர்மகண், ஜெபகிருபை, இளங்கோ, சரவணன், சேகர், மனோகரன், ஜெபசிங், சிலாக்கியமணி, தேவதாஸ், பாலச்சந்திரன், சுந்தரம், கிருஷ்ணகுமார், முத்துக்குமார், பால்ராஜ், விமல், பெஸ்டீன்குமார், சத்தியமூர்த்தி, ஜெயகுமார், சதாசிவம், ஜஸ்டீன், குமரேசன், பரந்தாமன், நாராயணன், ராபின், நீல்துரை, ரவிச்சந்திரன், திருமணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad